×

திருப்பத்தூர் மாவட்ட வனப்பகுதியில் வன விலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட வனப்பகுதியில் வினவிலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் கூறியதாவது: திருப்பத்தூர் வன மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் வனப்பகுதிகள் உள்ளன. இதில் ஏலகிரி மலை, ஜவ்வாது மலை, மாத கடப்பா, நெக்னாமலை, காவனுார் பனங்காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன.

இந்த வனப்பகுதிகளில் கரடி, மான், முயல், மலைப்பாம்பு, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வாழ்கின்றன. இந்தநிலையில் தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் வன உயிரினங்கள் தண்ணீர் இன்றி உயிரிழப்பதை தடுக்கும் வகையிலும், தண்ணீர் தேடி கிராமங்களுக்கு வருவதை தவிர்க்கும் வகையிலும் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், திருப்பத்தூர் வன மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான தண்ணீர் தொட்டிகளும், ஏராளமான சிறிய அளவிலான தண்ணி தொட்டிகளும் உள்ளது.

அதில் முழு அளவு தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தண்ணீர் குறையாத வகையில் வனத்துறையினர் கண்காணித்து வன உயிரினங்கள் தண்ணீர் இன்றி உயிரிழப்பதை தடுப்பார்கள். மேலும் வனப்பகுதிகளில் தண்ணீர் தேடி வரும் மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்பத்தூர் மாவட்ட வனப்பகுதியில் வன விலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி appeared first on Dinakaran.

Tags : Tirupattur district ,Tirupattur ,Dinakaran ,
× RELATED ஓசூரில் லாரி மோதி தொழிலாளி பலி